தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 13) போகி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நாளை (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிறு நேர அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
சனிக்கிழமை அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…