பொங்கல் விடுமுறையையொட்டி பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் :
????ரயில் எண் 06091 : தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய திங்கட்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
????ரயில் எண் 06092 – திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் :
????ரயில் எண் 06093 : தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
????ரயில் எண் 06094 : கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14, 2025 (செவ்வாய்கிழமை) மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில்கள் :
????ரயில் எண் 06089 : டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.00 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
????ரயில் எண் 06090 : நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 13 மற்றும் 20 ஆம் ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள்!
????ரயில் எண். 06104 ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
????ரயில் எண். 06103 தாம்பரத்தில் இருந்து ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாலை 5.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
தாம்பரம் – திருச்சி சதாப்தி சிறப்பு ரயில்!
தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் என பெயரிடப்பட்ட சிறப்பு ரயில் ஜனவரி 4, 5,10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படும்.
????ரயில் எண் 06190 -சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.”
????ரயில் எண் 06191 – திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு திருச்சி சென்றடையும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!