பொங்கல் பரிசுத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ. 1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ. 2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2023 ஜனவரி 2 ஆம் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
பரந்தூர் விமானநிலையம்: மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பேசியது என்ன?
“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது”: செல்லூர் ராஜூ காட்டம்!