பொங்கல் பரிசு தொகை: வாங்காதவர்கள் எத்தனை பேர்?

தமிழகம்

4.40 லட்சம் கார்டு தாரர்கள் பொங்கல் பரிசு தொகையை வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என்று கூறியிருந்த நிலையில், அதற்காக நிதி ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.

பொங்கலையொட்டி, ஒரு வாரம் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது.

இதை பெரும்பாலான அட்டைதாரர்கள் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார்கள். இதில் சிலர் வாங்காமல் விட்டுவிட்டனர்.

அதனால், தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.1000 பணத்தை, வாங்கவில்லை என்று கூட்டுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.

சக்தி

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

கிச்சன் கீர்த்தனா: இட்லி பர்கர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *