பொங்கல் கொண்டாட்டம்: மது விற்பனையில் முதலிடம் பிடித்த மாவட்டம்!

Published On:

| By Kavi

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் முதலிடம் பிடித்த மாவட்டம் குறித்து விவரத்தை டாஸ்மாக் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் நாள்தோறும் சராசரியாக ரூ.145 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது.

வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயரும்.  

கடந்த 2024 ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் 30-ம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

2025-ம் ஆண்டு புத்தாண்டில்  டிசம்பர் 31, ஜனவரி 1-ம் தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புத்தாண்டு மது விற்பனையில் தமிழ்நாடே முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில், பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், எப்போதும்போல மது விற்பனை சூடு பிடித்தது.

இதுகுறித்து மாநில வாணிபக் குழு (டாஸ்மாக்) வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள மது விற்பனை நிலையங்களில் ஜனவரி 13 முதல் 16 வரையிலான பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.725.56 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்கப்பட்டன.

கடந்தாண்டு பொங்கல் நாட்களில் ரூ.678.65 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் ரூ.46 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சராசரியாக தினசரி விற்பனை சுமார் ரூ.145 கோடியாகவும், மூன்று நாட்களில் மட்டும் தினசரி விற்பனையில் 67 சதவிகிதம் உயர்ந்து ரூ.241.85 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன.

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்போதும்போல அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை அதிகரித்த நிலையில், இந்தாண்டில் மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.149.55 கோடி மட்டுமே விற்பனையாகி உள்ளது’ என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : காஸாவில் போர் நிறுத்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பாட்டுடன் ஜூஸ் குடிப்பது நல்லதா?

’ஆர்.என். ரவியை மாத்திடாதீங்க’ : அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்

பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்!

டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் செய்த திடீர் மாற்றம்!

பிக்பாஸ் தமிழ் 8 நாளை இறுதி சுற்று : 50 லட்சத்தை வெல்ல போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel