பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு ஊர் திரும்பிய பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையிலிருந்து பலரும் கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் ஊர்களிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது,
பயணிகள் வருகையால் ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானர்.
குறிப்பாக நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 12 வரை 43 ஆயிரம் வாகனங்கள் விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் சுங்கச்சாவடியில் அதிக நேரம் வாகனங்கள் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.
செல்வம்
12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறை ரத்து!