வரவிருக்கிற பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்கள், நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து வருகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13,14, மற்றும்15 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கு முந்தைய தேதிகளான 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
அதனால் சென்னையில் உள்ள வெளியூர்வாசிகள் ஜனவரி 10ஆம் தேதி இரவே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யக் காத்திருந்தனர்.
ஜனவரி 10ஆம் தேதி ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த 12ஆம் தேதி காலை திறந்தது. இதற்காகக் காலை 5 மணியிலிருந்து சென்னை மக்கள் ரயில் நிலையங்களில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் முன்பதிவு நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. இதில் பெரும்பான்மையான டிக்கெட்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதனால் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யக் காத்திருந்த பலர் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் ஜனவரி 12 தேதிக்கான ரயில் டிக்கெட்களும் இன்று முன்பதிவு நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
இது பற்றிக் கூறிய சிலர், “ரயில்வே துறை அனைத்து டிக்கெட்களையும் ஆன்லைனில் விற்பதற்கு பதிலாக குறிப்பிட்ட சதவீத டிக்கெட்களை ரயில் நிலையத்தில் பதிவு செய்வதற்காக ஒதுக்கி வைக்க வேண்டும்” என்றனர்
இது குறித்துப் பேசிய ரயில்வே துறையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், வெயிட்டிங்க் லிஸ்ட்டை பொறுத்து ஜனவரி மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு தேதிகளின் விபரங்கள் இதோ
செப்டம்பர் 14 – ஜனவரி 12
செப்டம்பர் 15 – ஜனவரி 13
செப்டம்பர் 16 – ஜனவரி 14
செப்டம்பர் 17 – ஜனவரி 15
செப்டம்பர் 18 – ஜனவரி 16
செப்டம்பர் 19 – ஜனவரி 17
(உதாரணம்: செப்டம்பர் 14 அன்று ஜனவரி 12ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்)
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருமணத்துக்கு அழைக்காதது ஏன்?: ‘டான்’ டைரக்டர் பதில்!
ராமேஸ்வரம் டூ தலைமன்னார்: கோவா கூட்டத்தில் முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் எ.வ.வேலு
சத்தமே இல்லாமல் நல்ல காரியம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்க மனசு