மாதுளை பழங்கள் மலிவாகக் கிடைக்கும் இப்போதைய சூழ்நிலையில் இந்த மாதுளை லஸ்ஸி செய்து சாப்பிட்டு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த லஸ்ஸி முடி உதிர்வதைத் தடுக்கும். சருமச் சுருக்கங்களைச் சரி செய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ரத்த விருத்திக்கு உதவும். நாள் முழுக்க புத்துணர்வு பெற உதவும்.
என்ன தேவை?
கெட்டித் தயிர் – ஒரு கப்
மாதுளை முத்துகள் – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்
ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
புதினா இலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…