புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி உடல் இன்று (ஜனவரி 31) தோண்டி எடுக்கப்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் எக்ஸ்ரே செய்யப்பட்டது. Police unearth Jehabar Ali
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலூரைச் சேர்ந்த ஜெகபர் அலி, வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,
“எனது கணவர் ஜெகபர் அலி, காட்டுபாபா மசூதியில் இருந்து தொழுகையை முடித்துவிட்டு, திரும்பியபோது டிப்பர் லாரி ஏற்றிக் கொலைசெய்யப்பட்டார். இது திட்டமிடப்பட்ட கொலை ஆகும். Police unearth Jehabar Ali
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கனிமவள கொள்ளைகள் குறித்து திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்த பின்னரே, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரது உடல் ஜனவரி 18-ஆம் தேதி உடற்கூராய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அறிக்கை தரப்படவில்லை. உடற்கூராய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
10 நாட்களுக்கு பிறகு தான் உடற்கூராய்வு அறிக்கை எங்களுக்கு தரப்பட்டது. உடற்கூராய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை. இந்த வழக்கை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு தரவில்லை. Police unearth Jehabar Ali
எனவே, ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து மறு உடற்கூறாய்வு செய்யவும் அதனை காணொலியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கானது நேற்றைய (ஜனவரி 30) தினம் நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “திருமயம் தாசில்தார் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் ஜெகபர் அலியின் உடல் எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும். எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். Police unearth Jehabar Ali
இந்தநிலையில், திருமயத்தில் வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள மயானத்தில் வட்டாட்சியர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவர்களால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த அறிக்கையானது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. Police unearth Jehabar Ali