வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை!

தமிழகம்

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திரைத்துறையில் 1974 ஆம் ஆண்டு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடல் பாடி அசத்திய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று (பிப்ரவரி 4) அவரது வீட்டில் தலையில் காயங்களுடன் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களின் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வாணி ஜெயராம் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த நிலையில் 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வாணி ஜெயராம் உடல் இறுதியாக தகனம் செய்யப்படுவதற்கு முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் வரிசையாக நின்று துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 ரவுண்டுகள் சுடுவார்கள்.

மோனிஷா

தஞ்சையில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு!

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *