ஸ்ரீமதி பிறந்தநாளில் நடப்பட்ட மரக்கன்றுகள்: மறுத்த போலீஸ்!

தமிழகம்

உயிரிழந்த மாணவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று (ஆகஸ்ட் 12) 17 மரக்கன்றுகளை நட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியமூர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த ஸ்ரீமதி என்ற மாணவி அந்த பள்ளி விடுதி வளாகத்திலேயே ஜூலை 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,ஸ்ரீமதிக்கு இன்று (ஆகஸ்ட் 12) 17வது பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் நினைவாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 17 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இதில் அந்த மாணவியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், மாணவியின் தாய்மாமன் செல்வக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்காக அவர்கள் வேப்பூரில் உள்ள நர்சரி கார்டனில் மரக்கன்றுகளை விற்பனைக்கு கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் போலீசாருக்கு பயந்துகொண்டு கொடுக்கவில்லை. இதையடுத்து பண்ருட்டிக்குச் சென்று மரக்கன்றுகளை வாங்கி வந்துள்ளனர். பண்ருட்டியில் இருந்து 1000 பூச்செடிகளையும், 1000 மரக்கன்றுகளையும் வாங்கி வந்துள்ளனர்.

ரோஸ், மல்லிகை, செர்ரி, தென்னை, வேம்பு, சில்வர் உட், பலா, தேக்கு, இலுப்பை, புன்னை, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை வாங்கிவந்த அவர்கள், 17 மரக்கன்றுகளை தவிர்த்து, மற்றவைகளை பொதுமக்களுக்கு மாணவியின் நினைவாக வழங்க இருந்தனர். ஆனால், போலீசார் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். அத்துடன், மாணவியின் சொந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *