உதவ வந்தபோது விபத்து: பெண் தலைமை காவலர் பலி!

தமிழகம்

சென்னை குரோம்பேட்டையில் விபத்தில் சிக்கிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு உதவ சென்ற பெண் தலைமை காவலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஷீலா ஜெபமணி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். அவருடன் ரமா பிரபு என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

police head constable accident death in tambaram

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பணி முடித்து ரமா பிரபு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது குரோம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் ரமா பிரபு, ஷீலா ஜெபமணியை செல்போனில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனால் ஷீலா ஜெபமணி, ரமா பிரபுவை பார்ப்பதற்காக ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் ஷீலா ஜெபமணி மீது மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 தையல்கள் போடப்பட்டது. அவர் சுய நினைவை இழந்தார்.

மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இன்று அதிகாலை ஷீலா ஜெபமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக கார் ஓட்டி வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வம்

சென்னைக்கு திரும்பும் மக்கள்: அணிவகுக்கும் வாகனங்கள்!

குளித்தலை ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *