பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளையொட்டி, முக்கிய பிரமுகர்களின் செருப்பை பாதுகாக்க போலீசாரை நியமித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் மற்றும் 60வது குருபூஜை விழா தமிழகத்தில் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நேற்று தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் முக்கிய நிகழ்வாக ராமநாதபுரம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு பணிக்கான உத்தரவு கடிதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் நபர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறுவட்ட அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோருடன் காவலர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் 4 நாட்களுக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும். இந்நிலையில் அதனை கட்டுபடுத்தும் முக்கியமான பணியில் இருக்க வேண்டிய போலீசாரை காலணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இக்கடிதம் வெளியாகி சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வடகிழக்கு பருவமழை: நள்ளிரவு முதல் சென்னையில் கொட்டும் மழை!
அண்ணாமலை அரசியலும், ஆளுநர் ரவியின் அரசியலும்