சென்னையில் குடிபோதை கும்பல் கற்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த காவலர் விஜயன்(32) புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே மது போதையில் தகராறில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுக்க சென்ற ஆயுதப்படை காவலர் விஜயனை சுற்றிவளைத்த கும்பல் கற்கள் வீசி சரமாரியாக தாக்கியுள்ளது.
இதில் தலை பகுதியில் அடிபட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய விஜயனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குடிபோதையில் காவலர் மீது கல் எறிந்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்த அஜீத்குமார்( 23), வினோத்குமார்(25), ரவிக்குமார்( 25), விவேக்( 26) ஆகிய 4 இளைஞர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆயுதப்படை காவலர் விஜயன் (32) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து ஆழி என்ற மணிகண்டன் உட்பட தலைமறைவான மேலும் சிலரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல பாடலின் ’ரீமிக்ஸ்’!
இளமை திரும்புதே..காதலில் விழுந்த பில்கேட்ஸ்