போலீஸ் எல்லை மீறினால்… உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் : ஐகோர்ட்டு!

Published On:

| By Kavi

police cross limit in fir leak case

அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் போலீசாரால் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. police cross limit in fir leak case

கடந்த 2024 டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர் இணையத்தில் கசிந்தது.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்.ஐ.ஆர் தயார் செய்த காவல் நிலைய எழுத்தர் உட்பட 14 பேர் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.

இந்த நிலையில், எப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று (ஜனவரி 30) முறையீடு செய்தார்.

அப்போது அவர், பத்திரிக்கையாளர்களின் மொபைல் போன்களை கைப்பற்றி போலீசார் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு, ​​நீதிபதி சுப்ரமணியம் எப்ஐஆர் பொது களத்தில் எப்படி கசிந்தது என்பதை போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்றார்.

எல்லை மீறும் போலீஸ் police cross limit in fir leak case

police cross limit in fir leak case
கோட்டூர்புரம் காவல் நிலையம் police cross limit in fir leak case

இதையடுத்து வழக்கறிஞர் சூரிய பிரகாசம், “போலீசார் பத்திரிகையாளர்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. தங்களுக்கு சவால் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை சமூகத்திற்கு தெரிவிக்க விரும்புகிறார்கள். அந்த மனப்பான்மை இருக்கக் கூடாது” என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதிகள், “ நாங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை உத்தரவு மூலமாக ஏற்கனவே சொல்லிவிட்டோம்” என்று பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் எஃப்ஐஆர் கசிவு வழக்கை விசாரிக்க எஸ்ஐடி அமைக்க உத்தரவிட்டதை சுட்டிகாட்டினர்.

மேலும், அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் எங்களால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர்.

உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் police cross limit in fir leak case

police cross limit in fir leak case

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், “சென்னை காவல் ஆணையர் குறித்த கருத்துகள் தொடர்பான மேல்முறையீடு தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். பத்திரிக்கையாளர்களிடம் தேவையற்ற கேள்விகளை முன்வைப்பதன் மூலம் காவல்துறை தங்கள் அதிகாரத்தை மீறி நடந்து கொள்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதற்கு நீதிபதிகள், “நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றால் போலீசை அணுகி என்ன நடந்தது என்று விளக்கிச் சொல்லுங்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதுபோன்ற மனுவை நாங்கள் ஏற்க மாட்டோம். நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் ” என்று அறிவுறுத்தினர். police cross limit in fir leak case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share