ஜூன் 19 ஆம் தேதி காலை தொடங்கிய கள்ளக்குறிச்சி கருணாபுரம், கள்ளச்சாராய சாவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று (ஜூன் 24) ஆம் தேதி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இன்னொருவரும் பலியானார்.
நேற்று (ஜூன் 23) காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன் உள்பட 2 பேர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த சாமுண்டி என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இதுவரை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் உயிரிழந்தனர்.
–வேந்தன்
தெற்கு- வடக்கு… சூப்பர் ஸ்டார்களை இயக்கும் அட்லி: உற்சாகத்தில் ரசிகர்கள்!
வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொன்ன விஜய்- பட்டியல் சொல்லும் பாலிடிக்ஸ் செய்தி!