அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிக அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்து விட்ட நிலையில், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக காணொலி மூலம் பிரதமர் மோடி 1.3.2019-ல் அடிக்கல் நாட்டினார். புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயர ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக்கூடிய செங்குத்து தூக்கு பாலம் அமைய உள்ளது. தற்போது இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெறுகிறது.
மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைக்க ஏதுவாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிக அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரயில் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளை நீக்க முடியுமா?