பிரதமர் வருகை: காவல்துறை பாதுகாப்பு ஒத்திகை!

தமிழகம்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் இன்று (ஏப்ரல் 7) பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை – கோவை வந்தே பாரத் ரயில், சென்னை விமான நிலையம் புதிய ஒருங்கிணைப்பு கட்டிடம் திறப்பு விழா, தாம்பரம் – செங்கோட்டை ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

மாலை 4 மணியளில் சென்னை சென்ட்ரல் ரயில் – கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வந்தே பாரத் ரயில் 10-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதனால் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 8,9,10,11 ஆகிய நடைமேடைகளில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டடுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகள் இன்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

செல்வம்

மோடி வருகை: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர் சர்ச்சைகளும்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0