மிக்ஜாம் புயல் : பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் ஆறுதல்!

தமிழகம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் இரவே மழை நின்றாலும் இன்னும் பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை.

சென்னையில் மழை காரணமாக 17 பேர் வரை உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயலால் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் இருக்கிறேன்.

இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை மீட்கக் களத்தில் இறங்கி அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர்.

நிலைமை முழுமையாகச் சீராகும் வரை அவர்கள் தங்கள் பணியைத் தொடர்வார்கள்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

டிஎன்பிஎஸ்சிக்கு புதிய செயலாளர்!

மழை பாதிப்பு : அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *