குன்னூர் விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

Published On:

| By Monisha

pm modi announced relief fund

குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து நேற்று (செப்டம்பர் 30) மாலை கோவைக்கு திரும்பியுள்ளது.

அப்போது மாலை 5.30 மணியளவில் குன்னூர் – மேட்டுப்பாளையம் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? – டிடிவி பதில்!

லூசிஃபர் 2 அப்டேட்: மோகன்லாலின் ஆக்சன் ஆரம்பம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel