பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? எப்படி பார்ப்பது?

தமிழகம்

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை 8.30 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதால் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

அதன்படி நீட் தேர்வு முடிந்த அடுத்தநாள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஏப்ரல் 26) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதுபோன்று மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

எப்பா…. என்ன வெயிலு: குளித்துக் கொண்டே உறங்கும் குரங்குகள்!

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *