பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பிளஸ் 2 தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 8,03,385. மாணவிகள் 4,21,013 பேரும் மாணவர்கள் 3,82,371 பேரும் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் 7,55,451.

அதன்படி 94.03 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,05,753 பேரும் மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவர்களை விட மாணவியர்கள் 4.93 சதவிகிதம் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

செல்வம்

உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8

“லால் சலாம்” மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்

புதிய உச்சத்தில் தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0