பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு தடை!
பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என நேற்று தனி நீதிபதி( ஜீ.ஆர்.சுவாமிநாதன்) பிறப்பித்த உத்தரவிற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது நிறுவனம் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை காவல்துறையினர் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர். அந்த தடை உத்தரவை ரத்து செய்து தனது விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்க கோரி நேற்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் இந்த மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க கூடாது எனக் கூறி நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது எனக் கூறி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.
நேற்றைய வழக்கில் நீதிபதி பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது எனக்கூறி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதில் விநாயகர் சிலைகள் இயற்கையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும் சுற்றுச்சூழலுக்கு மாசு படுத்தக்கூடிய நச்சு வேதிப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் போன்ற மூலப் பொருட்கள் கலந்து செய்வதற்கே அனுமதி இல்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பாரிஸ் செய்வதற்கும் விற்பனை செய்வதற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலை தயாரிக்க கூடிய நிறுவனம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி பெறும்போது எத்தனை சிலைகள் தயாரிக்கப்படுகிறதோ அத்தனை சிலைகளுக்கான வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி நச்சுப் பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும். தயாரிப்பதற்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என விதிகள் உள்ளது. இந்த மனுதாரர் எவ்வித உரிமமும் பெறவில்லை.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் வழிமுறைகளை மனுதாரர் முற்றிலும் மீறி சிலைகள் தயாரித்துள்ளது தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமாக இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்,சுந்தர், பரத சக்கரவர்த்தி விசாரணைக்கு எடுத்தனர்.
அரசு தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகினார். ஒன்றிய அரசின் மாசு கட்டுபாட்டு வாரிய விதிமுறைகளுக்கு எதிராக மனுதாரர் விநாயகர் சிலை தயாரித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
அப்போது, “பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது அதை ஏன் பின்பற்றுவதில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சு பொருட்கள் கலந்து சிலைகள் செய்யக்கூடாது என உத்தரவு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா?.
ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகள் கலப்பதால் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது.
விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பது இல்லை எல்லாமே விஷம் தான்.
அமோனியம் மெர்குரி போன்று பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் நச்சு பொருள்தான்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தார்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.
இராமலிங்கம்
Asia Cup 2023 Final: ஒரே ஓவரில் 4 விக்கெட்.. ‘முகமது சிராஜ்’ புதிய சாதனை!
யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி