வற்றல் போட ஏற்ற காலம் மார்ச், ஏப்ரல் மாதங்கள். இந்த மாதங்களில் கொளுத்தும் வெயிலை சாதகமாகப் பயன்படுத்தும் விதமாக வற்றல், வடாகம் போன்றவற்றை செய்துவிட வேண்டும் என்று முதல்முறையாக நினைப்பவர்களுக்கான டிப்ஸ்…
* வடாகம் வைப்பதற்கான ஆயத்த வேலைகளை, முதல் நாள் இரவே செய்து விட வேண்டும். மறுநாள், வெயில் வரும் முன் காலை ஆறரை மணிக்குள் வடகம் இடும் பணிகளை முடித்துவிட வேண்டும்.
* காகம் கொத்தாமல் இருக்க, கறுப்புத்துணி அல்லது குடையை, குச்சியில் கட்டி வைக்கவும்.
* வடாகத்துக்குரிய மாவை மெஷினில் அரைக்கும்போதே, ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
* புளித்த மோர் அல்லது எலுமிச்சைச் சாறு விடலாம்.
* மாவு புளித்த பிறகு வற்றல் இட்டால், சுவை கூடும்.
* துணியில் வற்றல் பிழிந்தால், காயவிட்டு, நீர் தெளித்து, துணியில் இருந்து எடுக்கவும்.
* இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு காய விடவும். சரியாக காயவில்லை என்றால், பூஞ்சை பிடித்து விடும்.
* ஜவ்வரிசி மற்றும் கூழ் வடகம் எதுவானாலும், கூழில் பால் சேர்த்தால், வடாகம் வெள்ளை வெளேரென்று இருக்கும்.
* வடாகக் கூழில், தக்காளிச்சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைச் சாறு, கேரட் மற்றும் பீட்ரூட் சாறு கலந்தால், வண்ண வண்ண வடாகம் ரெடி.
* வடாகம் பிழியும் அச்சின் உட்புறம், எண்ணெய் தடவினால், பிழிவது எளிது.
* வற்றல் வகைகளை மைக்ரோவேவ் அவனிலும் பொரிக்கலாம்.
கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி!