கிச்சன் கீர்த்தனா: பைனாப்பிள் ஸ்குவாஷ்!

தமிழகம்

பைனாப்பிள் என்று சொல்லப்படும் அன்னாசிப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்தது. எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய இந்தப் பழத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துகள் அதிக அளவும் உள்ளன. செரிமானத்துக்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பைனாப்பிளில் ஸ்குவாஷ் செய்து வைத்துக்கொண்டு கோடையைக் குளுமையாக்கலாம்.

என்ன தேவை?

பைனாப்பிள் பழச்சாறு – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – முக்கால் கப்
பைனாப்பிள் எசென்ஸ் – கால் டீஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் – அரை சிட்டிகை (தேவைப்பட்டால்)

பைனாப்பிள் பழச்சாறு  எப்படி எடுப்பது?

பைனாப்பிளை தோல் நீக்கி நீளவாக்கில் 8 துண்டுகளாக நறுக்கித் துருவிக் கொள்ளவும். துருவியதை வடிகட்டியோ அல்லது துணியிலோ சேர்த்து அழுத்தி பிழிந்து சாறு எடுக்கவும்.

ஸ்குவாஷ்  செய்வது எப்படி?

தொண்டை கமறாமல் இருக்க  பைனாப்பிள் சாற்றை அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒன்றரை கப் சர்க்கரையில், முக்கால் கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கி, அதில் பைனாப்பிள் சாற்றையும், ஃபுட் கலரையும் கலந்து ஆறியதும் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து வடிகட்டி பாட்டிலில் நிரப்பவும்.

ஜூஸ் கலக்குவது எப்படி?

கால் பங்கு ஸ்குவாஷில் முக்கால் பங்கு தண்ணீர் கலந்து ஐஸ் கட்டிகள் போட்டு அருந்தவும்.

குறிப்பு:
இந்த ஸ்குவாஷ் சில மாதங்கள் ஆனாலும் கெடாது. தேவைப்படும்போது சிறிது தண்ணீருடன் கலந்து அருந்தினால் அருமையான ஜூஸ் ரெடி.

கிரேப் ஸ்குவாஷ்!

இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *