வெயிலுக்கு இதமாக சத்தான உணவைத் தேடும்போது சுவையான பழங்களும் நம் முதன்மை தேர்வாக இருக்கும். அந்த வகையில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த அன்னாசி சல்ஸா, ஹெல்த்தியாக மட்டுமல்ல… எனர்ஜி உணவாகவும் அமையும்.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் – அரை கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை தோலின் துருவல் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
எப்படிச் சமைப்பது?
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மல்ட்டி ஃப்ரூட் சாலட்
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு
GTvsRR : 19வது ஓவரில் ட்விஸ்ட்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்!
”மோடி தான் இந்தியாவின் முதல் எதிரி” : வைகோ ஆவேசம்!