பைனாப்பிள் கேசரி, பைனாப்பிள் ரசம் போன்றவற்றை ருசித்திருப்போம். அதென்ன பைனாப்பிள் குழம்பு? செய்துதான் பாருங்களேன்… வீட்டிலுள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி இந்த குழம்பை வைக்க சொல்வார்கள்.
என்ன தேவை?
பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) – ஒன்று
மிளகு – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
புளி – 50 கிராம் Pineapple Kulambu Recipe
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – 50 மில்லி
குழம்பு மிளகாய்த்தூள் – 60 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பைனாப்பிளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியையும் நறுக்கி கொள்ளவும். பைனாப்பிளை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி அதில் மிளகு, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து, அதன் பின் மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, வதங்கிய பின் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்க்கவும். பிறகு பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து, கொதித்த உடன் இறக்கிப் பரிமாறவும்.