பலகாரங்களும் பட்சணங்களும்தான் பண்டிகைகளுக்கு ருசி கூட்டுபவை. இந்த நவராத்திரி திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக… எளிதாகச் செய்யக்கூடிய, சுவையான இந்த பைனாப்பிள் பூந்தி செய்து அனைவரையும் அசத்தலாம்.
என்ன தேவை?
கடலை மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றேகால் கப்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
பைனாப்பிள் ஜூஸ் – கால் கப்
பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராகி அப்பம்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?
இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு
சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!