மெட்ரோ ரயில் பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாற்றில் சுரங்கம் தோண்டும் பணி Phase 2 Metro Rail Project

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடையாற்றில் சுரங்கம் தோண்டும் பணி!

தமிழகம்

மெட்ரோ 2 ம் கட்ட பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246  கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக,

வழித்தடம் 3- மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8கி.மீ நீளத்திற்கும், வழித்தடம் 4 – கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும்,

வழித்தடம் 5 – மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கும் என 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள், 48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 இரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

Phase 2 Metro Rail Project Tunneling in Adyar

இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பசுமை வழிச்சாலையில் மெட்ரோ இரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க இரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யும் பணியும் ஏற்கனவே முடிந்தது.

இந்தநிலையில் பசுமை வழிச்சாலை  மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க  2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (tunnel Boring machine) கொண்டு வரப்பட்டு,

சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது.

1 கிலோமீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு 10 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும் நிலையில், 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Phase 2 Metro Rail Project Tunneling in Adyar

கிரீன்வேஸ் சாலையில் இருந்து 2வது  சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இயக்கப்படும்.

தற்போது மாதவரம் பால்பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரை இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மார்ச் முதல் வாரத்தில் மாதவரம் முதல் வேணுகோபால் ஷாப்ட் வரையிலும், அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை மார்ச் இரண்டாம் வாரத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்படும்.

இதேபோல் சேத்துப்பட்டில் மே முதல் வாரத்திலும்,  மெரினாவில் ஜூன் மாதம் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலை.ரா

கிணறு தோண்டும்போது வெடி விபத்து: மூவர் பலி!

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *