சிறையில் இருந்து விடுதலையாக ஆளுநர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் ஒன்றாம் எண் கேட் முன்பு ரவுடி கருக்கா வினோத் இன்று (அக்டோபர் 25) மாலை 4 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து கிண்டி காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீசார் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், புழல் சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராததால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி வினோத் கடந்த 2015 ஆம் ஆண்டு தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததற்காக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை முன்பும் ரவுடி வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது!
வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை தேவை: ஜெயக்குமார் வலியுறுத்தல்!