மயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தக் கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு பாடையுடன் மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட டொக்கம்பட்டி கிராம மக்கள் நேற்று (ஜூலை 17) குழுவாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் பாடையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்கள் தரப்பை சேர்ந்த சிலரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளிக்க அனுமதி அளித்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள கிராம மக்கள், “எங்கள் கிராமத்தில் மயானமாக பயன்படுத்தி வந்த 15 சென்ட் நிலம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்று தனியார் ஒருவரால் தற்போது வேலி அமைக்கப்பட்டுவிட்டது. எனவே, கிராமத்தில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.