jagannathan welcomed the governor rn ravi

ஆளுநரை வரவேற்ற துணைவேந்தர் ஜெகன்நாதன்

அரசியல் தமிழகம்

jagannathan welcomed the governor rn ravi

பெரியார் பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் வரவேற்றார்.

பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021 முதல் ஜெகன்நாதன் பணியாற்றி வருகிறார். பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ‘பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி (PUTER) அறக்கட்டளை’ என்ற தனியார் நிறுவனத்தை, அரசின் அனுமதி இன்றி தொடங்கப்பட்டதாக ஜெகன்நாதன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அரசு சம்பளம் பெறும் பல்கலைக்கழக பணியாளர்களைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஜெகன்நாதன் மற்றும் பல்கலையில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் மீது, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் போலீஸில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார் ஜெகன்நாதன். இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக  சேலம் கூடுதல் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

“ஜாமீன் வழங்கியது தொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 11) பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் சென்றுள்ளார். அவரை, முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநர் வருகைக்கு முன்பாக பல்கலைக் கழகத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆறு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான ஆறு சிறப்புக் குழுக்கள் காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

IQAC அலுவலகம், நிதி அலுவலகம், தமிழ்த் துறை அலுவலகம், கணினி மையம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மையம் என பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஆளுநருக்கு எதிராக, சேலத்தில் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பினர், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் துணைவேந்தருக்கு துணைபோகும் ஆளுநரை கண்டிக்கிறோம்” என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணி மாநில துணை பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சேலம் பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு துணை நிற்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

jagannathan welcomed the governor rn ravi

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *