vice chancellor jagannathan arrested

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதனை போலீசார் இன்று (டிசம்பர் 26) கைது செய்துள்ளனர்.

சேலம் ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜெகன்நாதன் பணியாற்றுகிறார்.

இவர் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் புகார்களும் எழுந்து வந்தன. இந்நிலையில் ஜெகன்நாதன் நண்பர்களுடன் இணைந்து வர்த்தக நிறுவனத்தை தொடங்கியதாகப் புகார் எழுந்தது. மேலும் போலி ஆவணங்களை தயாரித்து தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் காவல்துறையினர் துணை வேந்தர் ஜெகன்நாதனை கைது செய்துள்ளனர்.

அரசு ஊழியராக இருக்கும் ஜெகன்நாதன் தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்க அனுமதி கிடையாது. புதிய தொழில் தொடங்க வேண்டுமென்றால் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும் தமிழ்நாடு அரசின் அனுமதியையும் பெற வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

”ஸ்ரீவைகுண்டம் எப்படி இருக்கு?”: உதயநிதியிடம் விசாரித்த அய்யா நல்லகண்ணு

விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts