காரைக்குடியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரின் புதிய வீட்டில் நாளை திறக்கப்பட இருந்த பெரியார் சிலையை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வலுகட்டாயமாக அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதோடு வீட்டு சுற்றுச்சுவருக்குள் மார்பளவு பெரியார் சிலையையையும் அமைத்துள்ளார்.
இதற்கான திறப்பு விழா நாளை (ஜனவரி 29) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் இன்று திடீரென வந்த போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் பெரியார் சிலை திறக்க அனுமதி மறுத்துள்ளனர். மேலும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் காவல்துறையினராலும் வருவாய்த் துறையினராலும் சேர்ந்து பெரியார் சிலையை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த அரசெழிலன் கூறுகையில், “காரைக்குடியில் நாளை 29.01.2023 தோழர் இளங்கோவன் அவர்களின் தமிழ் இல்லத் திறப்பு விழாவும் வீட்டின் சுற்றுச்சுவருக்குள் பெரியார் சிலைத் திறப்பு விழாவும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் திறக்கப்பட இருந்தது.
அரசு அனுமதி பெற்ற பட்டா இடத்தில் சிலை அமைக்கலாம் என்ற இரு நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டியும் கூட இன்று காவல்துறையினராலும் வருவாய்த் துறையினராலும் பெரியார் சிலை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. வன்மையாகக் கண்டிக்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை திறக்கப்பட இருந்த பெரியார் சிலை இன்று போலீசாரால் அகற்றப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை
இந்திய போர் விமானங்கள் மோதி கோர விபத்து: விமானி உயிரிழப்பு!
Democracy is murdered