பெரியார், அம்பேத்கர் விருதுகள்: இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Monisha

periyar ambedkar awards for 2023

2023 ஆம் ஆண்டிற்கான பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் (ஜனவரி 13) வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

அதே போன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்க உள்ளார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராசர் விருது உ.பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநி பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசுவிற்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதிக்கும் வழங்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மிஷன்: சேப்டர்1 – விமர்சனம்!

கமலின் 237 வது படத்தை இயக்கும் பிரபல ஆக்‌ஷன் டைரக்டர்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share