பெரியார், அம்பேத்கர் விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் விருதுகள் 9 பேருக்கு இன்று (ஜனவரி 13) வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் 2023-24 ஆண்டுக்கான விருதுகள் யார் யாருக்கு வழங்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 12 அறிவித்தார்.

இன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

2023 சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது” சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியனுக்கு வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும்,

அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகளுக்கும்,

பெருந்தலைவர் காமராசர் விருது மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமனுக்கும்,

அண்ணல் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டாக்டர்.பி.சண்முகத்துக்கும்,

பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுவுக்கும்,

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழனி பாரதிக்கும்,

தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கும்,

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதிக்கும் வழங்கினார்.

இந்த விருதுடன் தலா ரூ.2 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தஞ்சை ஆணவக் கொலை: மேலும் மூவர் கைது!

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் – அமித்ஷா உறுதி : டி.ஆர்.பாலு பேட்டி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel