பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வதொன்றும் அவ்வளவு சவாலான வேலையெல்லாம் இல்லை. கொஞ்சம் பிளானிங்கும், தேவையான பொருட்களின் ஸ்டாக்கும் இருந்தால் குழந்தைகளே அதிசயிக்கும் வகையில் வெரைட்டியாகச் செய்து கொடுத்து அசத்தலாம். அதற்கு இந்த பெப்பர் பனீர் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பனீர் – 200 கிராம்
நறுக்கிய குடமிளகாய் – அரை கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு (நறுக்கியது) – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பனீரை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள், பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?