சிக்கன் ஃப்ரை, மட்டன் ஃப்ரை, மஷ்ரூம் ஃப்ரை என்று ஃப்ரை அயிட்டங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, இப்போது மலிவாகக் கிடைக்கும் காலிஃப்ளவர் வாங்கி, வீட்டிலேயே இந்த பெப்பர் காலிஃப்ளவர் ஃப்ரை செய்து அசத்தலாம். pepper-cauliflower-fry
என்ன தேவை?
காலிஃப்ளவர் – ஒன்று (பெரியது)
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 250 கிராம்
சோள மாவு – 25 கிராம்
உளுந்துப் பொடி – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாக நறுக்கிக் கொள் ளவும். வெந்நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு அலசி வடிகட்டவும். நறுக்கிய காலிஃப்ளவருடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கலந்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வேக வைத்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி பரிமாறவும்.