எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
எண்ணூர், பெரியகுப்பம் பகுதியில் நேற்று (டிசம்பர் 27) நள்ளிரவு 11.45 மணியளவில் கோரமண்டல் உர தொழிற்சாலைக்கு திரவ அமோனியம் எடுத்து செல்லும் குழாயில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
ஆனால் மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. பின்னர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோரமண்டல் தொழிற்சாலைக்கு வெளியில் நோட்டீஸ் ஒட்டினர்.
இதனிடையே அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு தங்களுக்கு தற்காலிக தீர்வு வேண்டாம் என்றும் நிரந்தரமாக கோரமண்டல் தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
தொழிற்சாலைக்கு நோட்டீஸ் ஒட்டிய பிறகு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அப்பகுதி மக்கள் தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
திகாரா? இல்ல தி.நகரா?: அப்டேட் குமாரு
சென்னை – 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!