பொங்கல் லீவ் ஓவர்… சென்னை ரிட்டர்ன்… எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்?

Published On:

| By Selvam

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்கு திரும்புவதால் இன்று (ஜனவரி 20) பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையானது ஜனவரி 13 முதல் 16-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக ஜனவரி 17-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக பலரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இருப்பினும், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று (ஜனவரி 19) போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்க உள்ள நிலையில், காலை முதல் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் படையெடுத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பயணிகள் வசதிகாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் பரந்தூர் செல்லும் விஜய் வரை!

கிச்சன் கீர்த்தனா: ஆனியன் சாதம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel