magna elephant in forest

மல்லுக்கட்டிய மக்னா யானை… போராடி பிடித்த வனத்துறையினருக்கு புதிய சிக்கல்!

தமிழகம்

கோவையில் 3 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்ட மக்னா யானையை வனப்பகுதிகளுக்குள் விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்த மக்னா யானை குனியமுத்தூர், செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்தது.

மக்கள் நடமாட்டம், வீடுகள் இருக்கும் சாலைகளில் மக்னா யானை உலா வந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

மேலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவும் கோரிக்கை வைத்தனர்.

வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடிக்க முயற்சி மேற்கொண்டதால் அச்சமடைந்த மக்னா யானை பகல் நேரங்களில் அடர்ந்த புதர்களுக்குள் சென்று மறைந்து கொள்வதும் இரவு நேரங்களில் உலா வருவதுமாக இருந்தது.

people reject to leave magna elephant in forest

இதனால் வனத்துறையினருக்கு யானையை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து யானையை பிடிக்க முயன்று வந்த வனத்துறையினர் நேற்று (பிப்ரவரி 23) மயக்க ஊசி செலுத்தி, யானையை 3 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர்.

மயக்கமடைந்த மக்னா யானையை கும்கி யானை சின்னதம்பி உதவியுடன் கயிறு கட்டி லாரியில் ஏற்றினர் வனத்துறையினர்.

people reject to leave magna elephant in forest

பின்னர் மக்னா யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கழுத்துப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

டபிள்யுடபிள்யுஎஃப் அமைப்பு சார்பில் வனத்துறைக்கு அளிக்கப்பட்ட இந்த ரேடியோ காலரில் உள்ள ஜிபிஎஸ் உதவியுடன் யானையின் நடமாட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க முடியும்.

சுமார் 3 ஆண்டுகள் வரை சிக்னல்களை அனுப்பும் அளவுக்கு அதன் பேட்டரி திறன் உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

யானையைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் விடவும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், கோவையில் பிடிக்கப்பட்ட மக்னா யானை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை வெள்ளியங்காடு சாலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த தகவலை அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைபிடித்து யானையை திருப்பி எடுத்து செல்ல வலியுறுத்தினர்.

யானையை இங்கு விட்டால் மீண்டும் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தும் என்பதால் யானையை விடக்கூடாது என்று விடிய விடிய எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வனத்துறையினர் மக்னா யானையை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் லாரியுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

people reject to leave magna elephant in forest

யானையை எங்கு விடுவது என்று இன்னும் முடிவு எடுக்கப்படாததால் வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

மோனிஷா

5000 கோடி பணம்… 5000கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!

ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *