சென்னை மெட்ரோவில் ரூ.5-க்கு பயணம் செய்யலாம்!
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு அன்றைய தினம் மெட்ரோ ரயிலில் கட்டணம் வெறும் 5 ரூபாயில் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. people can travel for 5 rupees in metro
இதுகுறித்து இன்று(நவம்பர் 24) சி.எம்.ஆர்.எல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
கியூஆர் பயணசீட்டுகளில் (Static QR; Paytm; Whatsapp and PhonePe) ஒற்றைப் பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்குகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 3, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணத்தை வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முன்னாள் டிஜிபி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து 24 வயது பெண் மருத்துவர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி!
people can travel for 5 rupees in metro