வங்கிக் கொள்ளை: பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு- போன் பண்ணுங்கள்: டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம்

சென்னை வங்கியில் கொள்ளையடித்தவரக்ள் பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.16 கோடி மதிப்புடைய 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் வாகனத்தில் தப்பி சென்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை போலீசார் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழக எல்லையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காவலர்களுக்கு ரூ.1லட்சம் பரிசு!

அதன் ஒரு பகுதியாக வங்கி கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்யும் காவலர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சி.சைலேந்திர பாபு இன்று (ஆகஸ்டு 14) காலை அறிவித்தார்.

இதற்கிடையே வங்கி கொள்ளை சம்பவத்தில் வங்கி மக்கள் தொடர்பு அதிகாரி முருகன் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

மேலும் முருகனின் கூட்டாளி பாலாஜி என்பவரையும் கைது செய்து, தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி கூறுகையில், ”கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையை இப்போது தீவிரப்படுத்தி உள்ளோம்.

இதில் தொடர்புடைய 12 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் பரிசு!

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

முன்னதாக காவலர்களுக்கு மட்டுமே பரிசு அறிவித்த நிலையில் கொள்ளையர்கள் இருப்பிடம் குறித்து தகவல் தந்தாலோ, அவர்களை பிடித்து கொடுத்தாலோ பொதுமக்களுக்கும் 1லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு என்று டிஜிபி அறிவித்துள்ளார்.

அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறை – 044-28447703

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை 044-23452324

கிறிஸ்டோபர் ஜெமா

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக தலைவர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *