சென்னையில் பகல் நேரங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி வாகனம் ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து சாலை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் விழா இன்று (ஜூன் 19 ) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை துவக்கி வைத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவலர்களுக்கு பல்வேறு போக்குவரத்து உபகரணங்களை வழங்கி கூகுள் மேப் ட்ராபிக் வசதியை துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ” சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும். இரவு நேரங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட வேகத்தை தாண்டி வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
மேலும், ஸ்பீடு ரேடர் கன் தொழில் நுட்ப கருவி சென்னையின் பல இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த கருவி 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் அவர்களை புகைப்படம் எடுக்கும், பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த விவரம் அவர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரம் இது போக்குவரத்து பாதுகாப்புக்கு முக்கியமானது என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
பேருந்துகள் மோதல்: நால்வர் பலி – விபத்துக்குக் காரணம் என்ன?