காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் அவருக்கு போக்குவரத்து ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணலி விரைவு சாலை MFL சந்திப்பு பகுதியில் கண்டெய்னர் லாரி ஒட்டுனர்கள் 100 க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு ஓட்டுநர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி ஓட்டுனர் சங்கத்தினர், லாரி ஓட்டுனர்கள் 48 மணி நேரம் சென்னை துறைமுகத்திற்கு வண்டியை இயக்குவதால் அவர்களால் சீருடை அணிய முடியாத சூழ்நிலை உள்ளது.
8 மணி நேரம் வேலை என்றால் கண்டிப்பாக சீருடை அணியலாம். ஆனால் சென்னை துறைமுகம் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். துறைமுகத்தில் ஏற்படும் காலதாமதத்தினால் லாரி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.
ஆன்லைன் மூலமாக வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து பின்னர் அபராதம் விதிப்பதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஓட்டுநர் சாலையில் NO பார்க்கிங்கில் வண்டி நிறுத்தி இருந்தால் அதனை செல்போன் மூலம் லாரி உரிமையாளருக்கு தகவல் கொடுத்து பின்பு வழக்கு பதிவு செய்வதாகவும்,
லாரி ஓட்டுநர்கள் லுங்கி அணிந்தும் வண்டியை இயக்க அனுமதி அளிப்பதாகவும் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினர்.
கலை.ரா
காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வு குழு!
10 % இட ஒதுக்கீடு: விதை நாங்கள் போட்டது – வரவேற்கும் காங்கிரஸ்!