மாநகராட்சிகளில் அமலுக்கு வந்தது தாமத வரிக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம்!

Published On:

| By christopher

மாநகராட்சிகளில் வசிப்போர் இனி வரி செலுத்துவதில் தாமதித்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவிகிதம் அபராத தொகையுடன் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அமலுக்கு வந்துள்ளது.

வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, நிறுவனங்களுக்கான வரி என தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அரையாண்டுக்கு ஒருமுறை வரி வசூல் செய்யப்படுகிறது.

மாநகராட்சிக்கு முறையாக சிலர் வரி செலுத்தாமல் இருப்பதால், வரி நிலுவை பல கோடி ரூபாய் வரை உள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கும் நிலைக்கும் அவ்வப்போது தள்ளப்படுகிறது.

நிதியாண்டு முடிவுக்கு முன்னதாக மாநகராட்சி பணியாளர்கள் வரி வசூல் செய்ய வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்குவது, அதிக வரி நிலுவை வைத்துள்ள வீடுகளின் குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது, வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பது எனப் பல்வேறு நட வடிக்கைகளில் ஈடுபட்டு வரியை வசூலித்து வந்தாலும் வரி நிலுவை அதிக அளவில்தான் உள்ளது.

இந்த நிலையில், முதலாம் அரையாண்டு வரியை முதல் மாதமான ஏப்ரல் மாதத்துக்குள் செலுத்திவிட்டால் வரித் தொகையில் 5 சதவிகித தள்ளுபடி செய்யும் திட்டத்தையும் அரசு அறிவித்தது.

இதேபோல் இரண்டாம் அரையாண்டில் அக்டோபர் மாதத்துக்குள் வரி செலுத்தினால் 5 சதவிகித ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வரியில் கழித்துக் கொள்ளும் திட்டமும் அமலில் உள்ளது.

தற்போது வரி வசூலை அதிகரிக்கவும், மக்கள் தாங்களாகவே மு ன்வந்து வரியை செலுத்தவும் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி முதல் அரையாண்டுக்கான வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கட்டத் தவறியிருந்தால் செலுத்தவேண்டிய வரியில் ஒரு சதவிகிதம் அபராதமாக சேர்த்து செலுத்த வேண்டும். இது அக்டோபர் இறுதி வரைதான்.

அக்டோபர் மாதத்துக்குள்ளும் முதல் அரையாண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் 2 சதவிகிதம் அபராதம் நவம்பரில் விதிக்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் அபராதம் ஒரு சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் வரி செலுத்தும் கணினி மென்பொருளில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. அத்துடன் 6 சதவிகித வரி உயர்வும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்

இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

மத்திய மாநில அரசுகளின் உறவை ஆளுநர் துண்டிக்கிறார் : அமைச்சர் ரகுபதி

ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? – நெகிழ வைத்த ராஜேஷ்குமாரின் பேஸ்புக் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share