கிச்சன் கீர்த்தனா : கம்பு – பச்சைப்பயறு – வெல்ல மசியல்

தமிழகம்

நம் முன்னோரின் முக்கிய உணவாக அரிசி சாதம் இருந்தது என்றால், துணை உணவாகச் சட்னி, துவையல், மசியல் போன்றவை இருந்தன. அந்த வரிசையில் நம் முன்னோர் பின்பற்றி வந்த உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பிடித்தது துணை உணவுகளில் ஒன்றான கம்பு பச்சைப்பயறு – வெல்ல மசியல்.

ஆனால், அந்த மசியல் வகைகளை பலர் மறந்தேவிட்டனர். உடலுக்கு முழு ஆற்றலை தரக்கூடியது மசியல் உணவுகள். அவற்றில் ஒன்று இந்த கம்பு பச்சைப்பயறு – வெல்ல மசியல்.

என்ன தேவை?

கம்பு – அரை கப்
பச்சைப்பயறு – அரை கப்
துருவிய வெல்லம் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறையும் கம்பையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் அதை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர்விட்டு, நான்கு முதல் ஐந்து விசில் வரை அடி பிடிக்காமல் வேகவைக்கவும்.

பிறகு குக்கர் மூடியை ரிலீஸ் செய்துவிட்டுத் தண்ணீரை வடித்து, பருப்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் சாப்பிடலாம். நான்கு நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி

கிச்சன் கீர்த்தனா – கம்பு – பருப்பு சாதம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *