ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால், நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் செல்லத்துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது,. “தேங்காய், கடலை, எள் என எல்லாமே தமிழகத்தில் கிடைக்கின்றன. அப்படி இருக்கும்போது, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை விற்பனை செய்யாமல் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்க கூடிய பாமாயில் எண்ணெயை அரசாங்கம் விற்பனை செய்வது ஏன்?
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் பாமாயில் விற்பனை செய்வதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும். பாமாயில் விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுக்கு பல்லாயிரம் கோடி நஷ்டத்தை தவிர்க்க எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ரேஷனில் விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம்’ : உண்மை என்ன?
அசைவ உணவு இல்லாத அயோத்தி கேஎஃப்சி?
ஹெல்த் டிப்ஸ் : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்?
பியூட்டி டிப்ஸ் : உங்களுக்கேற்ற ஷாம்பூ எது?