கிச்சன் கீர்த்தனா: பருத்தித்துறை வடை!

தமிழகம்

பருத்தித்துறை வடையா… பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று விஷயம் தெரியாதவர்கள் வியப்படைவார்கள். இலங்கையில், வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை எனும் ஊர்தான், இந்த வடை சுடுவதில் பேமஸ், அதனாலேயே இதற்கு ஊர்ப் பெயர் வந்தது.

பலகார வகைகளில் ஊர்ப்பெயரைத் தாங்கியிருக்கும் பெருமை இந்த வடைக்கே உரியது. அப்படிப்பட்ட வடையை நீங்களும் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

உளுந்து – அரை ஆழாக்கு
அரிசி மாவு – 1 ஆழாக்கு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – பொடியாக நறுக்கியது
எண்ணெய் – பொரிக்க

எப்படிச் செய்வது?

உளுந்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் இட்டு மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இதை ஒரு பவுலில் இட்டு மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். இதை, சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தட்டி கடாயில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், பருத்தித்துறை வடை ரெடி.

பிரெட் அவல் தோசை!

அவரைக்காய் பிரியாணி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.