இன்று சூரிய கிரகணம்: எங்கு, எப்போது, எப்படிப் பார்ப்பது?

தமிழகம்

அரிதாக நிகழும் பகுதி சூரிய கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதை ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து காணலாம். 

உலக அளவில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 02:19 மணிக்கு ஆரம்பித்து, மாலை 06:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.

இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரங்களில் இந்த நிகழ்வைக் காண இயலும். இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லேவில் சூரிய கிரகணம் 55 சதவிகிதம் வரை தெரியும்.

திருவனந்தபுரம் வான் இயற்பியல் ஆய்வகத்தில் இரண்டு சதவிகிதமும், கொடைக்கானலில் ஏறத்தாழ மூன்று முதல் நான்கு சதவிகிதமும் தென்படும்.

சென்னையில் மாலை 05:14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். 05:44 மணிக்கெல்லாம் முடிந்துவிடும்.

சூரியன் அன்று 05:44 மணிக்கு மறையும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இதுவும் சூரியன் மறைகையில்தான்.

எனவே, மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்த நிகழ்வு நடக்கிறது.

கிரகணம் ஆரம்பிக்கும்போது தொடுவானிலிருந்து சுமார் 7 டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும்.

சூரியனை கிரகணத்தின்போதோ, சாதாரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படிச் செய்தால் கண் பார்வையை இழக்க நேரிடும்.

இதனைப் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கு கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஜூன் 21ஆம் நாள் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2இல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம்.

-ராஜ்

தீபாவளி: உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி!

கிச்சன் கீர்த்தனா – வெல்ல மைசூர்பாகு

+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *